சுடச்சுட

    

    மணிப்பூர் இறுதிக்கட்டத் தேர்தல்: ஒரு மணி நிலவரப்படி 67 சதவீத வாக்குகள் பதிவு

    By DIN  |   Published on : 08th March 2017 02:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணிப்பூரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவில் ஒரு மணி நிலவரப்படி 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மணிப்பூர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஒரு மணி நிலவரப்படி 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 22 தொகுதிகளில், முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்குடன் சமூகப் போராளி இரோம் ஷர்மிளா நேரடியாகப் போட்டியிடும் தெளபால் தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai