சுடச்சுட

  

  மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூர் மாவட்டத்தில் போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயிலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

  இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
  இதுதொடர்பாக, ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஜிதேந்திர குமார் ஜெயந்த் கூறியதாவது:
  போபாலிலிருந்து உஜ்ஜயின் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. ஷாஜாபூர் மாவட்டம், ஜப்டி ரயில் நிலையம் அருகில் வந்தபோது, அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது.
  இதில், 8 பேர் காயமடைந்தனர். அவர்களில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் போபாலிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  எஞ்சியவர்கள் காலாபிபால் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பினால், 2 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, பொதுப் பெட்டியின் கண்ணாடி ஜன்னல்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. மேலும், கடுமையான புகைமூட்டம் எழும்பியதையடுத்து, அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
  சேதமடைந்த 2 பெட்டிகளும் அகற்றப்பட்ட பின்னர், அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் ஜிதேந்திர குமார் ஜெயந்த்.
  இதனிடையே, உஜ்ஜயின் கூடுதல் காவல்துறை தலைவர் மது குமார், ராட்லம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
  இதுதொடர்பாக, இந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணவேணி தேசாவது கூறுகையில், "குண்டுவெடிப்பினால் பொதுப் பெட்டியின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்துள்ளது. எனினும், வெடிபொருள்களின் பாகங்கள் எதுவும் அங்கு சிக்கவில்லை' என்றார்.
  விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்குமாறு மாநில காவல்துறை தலைவர், தடயவியல் அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், பயங்கரவாத தடுப்புப் படையினர் உள்ளிட்டோருக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உத்தரவிட்டுள்ளார்.
  நிதியுதவி அறிவிப்பு: இதனிடையே, குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும், காயமடைந்த எஞ்சிய நபர்களுக்கு தலா ரூ. 25,000-மும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
  அறிக்கை கோரியது மத்திய அரசு: போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக விரிவான அறிக்கையை அளிக்கும்படி மத்தியப் பிரதேச அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
  3 பேரிடம் போலீஸார் விசாரணை: இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக பிபாரியா நகரில் மூவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai