சுடச்சுட

    

    'முதலில் வாக்களியுங்கள்; பிறகு உணவருந்துங்கள்': மோடியின் அன்புக் கட்டளை

    By DIN  |   Published on : 08th March 2017 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi


    புது தில்லி: உத்தரப்பிரதேச மற்றும் மணிப்பூர் மக்கள் இன்று தங்களது தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் தவறாது வாக்களிக்கும்படி பிரதமர் மோடி அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மணிப்பூரிலும் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்த நிலையில், இம்மாநில மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் அளிக்கும்படி டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, 'முதலில் வாக்களியுங்கள்; பிறகு உணவருந்துங்கள்' என்று அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசி உட்பட 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மணிப்பூரில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் 2ம் கட்ட வாக்குப்பதிவில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாக வேண்டும் என்றும் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai