சுடச்சுட

    

    மேற்கு வங்கம்: குழந்தைகள் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 08th March 2017 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி பகுதியில் நடைபெற்ற குழந்தைகள் கடத்தல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அந்த மாநில சட்டப்பேரவை முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
    இந்நிலையில், இந்தக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பாஜகவின் மகளிரணிப் பொதுச் செயலாளர் ஜூஹி சௌதுரியை சிஐடி அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். இது பாஜகவினரை பழிவாங்கும் செயல் என அக்கட்சி குற்றம்சாட்டியது. இந்தச் சூழலில், இந்த குழந்தைகள் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மேற்கு வங்க சட்டப்பேரவை முன்பு அந்த மாநில பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:
    பாஜகவின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதற்காக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு முயன்று வருகிறது. அதன் காரணமாகவே, குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில் பாஜகவினரை சிஐடி பிரிவு அதிகாரிகள் குறிவைத்து வருகின்றனர். மாநில அரசின் தூண்டுதலின் பேரிலேயே சிஐடி இவ்வாறு செயல்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றார் திலீப் கோஷ்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai