சுடச்சுட

  

  ரயில் நிலையங்களில் உணவகங்கள் நடத்துவதற்கு மகளிருக்கு 33 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் வாய்ப்பில் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும் என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஐஆர்சிடிசி உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறிய அளவிலான உணவகங்கள் சுமார் 8,000 இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று ஆயிரக்கணக்கான பெரிய உணவகங்களும் உள்ளன.
  அங்கு தரமான உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒதுக்கீட்டு முறை மூலம் அந்த உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, சிறிய ரக உணவகங்களில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போர், சிறுபான்மையினர், ஓபிசி வகுப்பினர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோருக்கு மொத்தமாக 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  பெரிய உணவகங்களில் அந்த ஒதுக்கீட்டு விகிதம் 49.5 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் அந்த ஒதுக்கீட்டில் 33 சதவீதம் மகளிருக்கு வழங்கப்படும் என்று நிகழ் நிதியாண்டுக்கான (2016-17) ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
  அதன்படி அந்த அறிவிப்பு தற்போது அமல்படுத்தப்பட்டிருப்பதாக ஐஆர்சிடிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai