சுடச்சுட

    

    ரயில் குண்டு வெடிப்பு: 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பயங்கரவாதி சுட்டுக்கொலை

    By DIN  |   Published on : 08th March 2017 11:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    police

    லக்னோ: மத்தியபிரதேச மாநிலம் போபால் - உஜ்ஜயின் ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பங்கரவாதியை லக்னோவில் 12 மணி நேர போராட்டத்துக்கு பின்பு பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    மத்திய பிரதேச மாநிலம் போபால் - உஜ்ஜயின் ரயிலில், நேற்று (மார்ச்,7) காலை, வெடிகுண்டு வெடித்ததில், 8 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பயங்கரவாதி ஒருவன், லக்னோவில் பதுங்கியிருப்பதாக, போலீஸாருக்கு, மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

    இதையடுத்து லக்னோவின் புறநகர் பகுதியான, காகோரியில் உள்ள ஒரு வீட்டில், பயங்கரவாதி ஒருவன் பதுங்கியிருப்பதை, உ.பி., போலீஸாரும், பயங்கரவாத தடுப்புப் படையினரும் உறுதி செய்தனர். அதன்படி, அந்த வீட்டை 30க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றி வளைத்தனர். அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    போலீஸார் தன்னை சுற்றி வளைத்ததை உணர்ந்த பயங்கரவாதி, அவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் துவங்கினான். அவனை உயிருடன் பிடிக்க, போலீஸார் திட்டமிட்டனர். இருப்பினும் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். வீட்டில் இரண்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைபற்றப்பட்டன.

    நேற்று மாலை, 3:30 மணிக்கு துவங்கிய இந்த நடவடிக்கையானது 12 மணி நேரத்துக்கு பின் இன்று அதிகாலை 3.40 மணிக்கு முடிவுக்கு வந்தது. பயங்கரவாதி சைபுல்க்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai