சுடச்சுட

    

    ரூ.10.5 லட்சம் கொண்டு வந்த அருணாசல் பாஜக தலைவரிடம் வருமான வரித் துறை விசாரணை

    By DIN  |   Published on : 08th March 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ரூ.10.5 லட்சம் ரொக்கத்தைக் கொண்டுவந்த அருணாசலப் பிரதேச பாஜக தலைவர் தாபிர் காவை வருமான வரித் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

    மணிப்பூரில் இரண்டாம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், அந்த மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து அருணாசலப் பிரதேச பாஜக தலைவர் தாபிர் காவ் விமானம் மூலம் அஸ்ஸாமின் குவாஹாட்டிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டார். அவரிடம் சோதனை நடத்தியபோது, அவர் ரூ.10.5 லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.
    இது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள வரம்பை விட அதிகமானது என்று விமான நிலையங்களின் பாதுகாப்பை கவனிக்கும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். எனினும் அவர் அங்கிருந்து குவாஹாட்டி புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
    அதன்பின், தாபிரிடம் உள்ள ரொக்கம் குறித்து வருமான வரித்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவுக்கு தொழிலகப் பாதுகாப்புப் படையினர் தகவல் அளித்தனர். அவர்கள் குவாஹாட்டி விமான நிலையத்தில் தாபிரிடம் சம்பந்தப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
    இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், தாபிர் வைத்திருந்த ரொக்கமானது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணத்தை வெளியிட கடைசி வாய்ப்பான பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பணம் என்று தெரிய வந்தது.
    இந்த விவகாரம் குறித்து தாபிர், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "நான் வைத்திருந்தது என்னால் அறிவிக்கப்பட்ட சொந்தப் பணமாகும். அதற்கும் எனது கட்சியான பாஜகவுக்கோ, மணிப்பூர் தேர்தலுக்கோ தொடர்பில்லை' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai