Enable Javscript for better performance
லஞ்சம் வழங்கும் நடைமுறை: ஆசியாவிலேயே இந்தியாவுக்கு முதலிடம்!- Dinamani

சுடச்சுட

    

    லஞ்சம் வழங்கும் நடைமுறை: ஆசியாவிலேயே இந்தியாவுக்கு முதலிடம்!

    By DIN  |   Published on : 08th March 2017 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rs

    லஞ்சம் வழங்குவதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே இந்தியா முதலிடம் வகிப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
    ஜெர்மனியை மையமாகக் கொண்ட சர்வதேச ஊழல் எதிர்ப்பு உரிமைகள் அமைப்பு சார்பில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
    அதில், லஞ்சம் வழங்குவதில் இந்தியா முதலிடம் வகிப்பது தெரியவந்துள்ளது. சாதாரண அரசுச் சேவைகளைப் பெறுவதற்கு கூட மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் லஞ்சம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தாங்கள் லஞ்சம் அளித்தால் மட்டுமே அரசு சேவைகளைப் பெற முடியும் என்று 69 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, வியட்நாமில் 65 சதவீதம் பேர் தாங்கள் லஞ்சம் அளிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
    இது, பாகிஸ்தானில் 40 சதவீதமாகவும், சீனாவில் 26 சதவீதமாகவும் உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே ஜப்பானில் மட்டும்தான் லஞ்சம் வழங்குவது மிகக் குறைவாக உள்ளது.
    அந்நாட்டில் வெறும் 0.2 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் லஞ்சம் வழங்க வேண்டி இருப்பதாக கூறியிருக்கின்றனர். தென் கொரியாவில் இது 3 சதவீதமாக உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai