சுடச்சுட

    

    வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்துப் பேச மோடி அஞ்சுகிறார்: ராகுல் காந்தி

    By DIN  |   Published on : 08th March 2017 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Rahul

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து பேசவே பிரதமர் நரேந்திர மோடி அஞ்சுவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
    தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
    அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி விட்டது. அங்கு இந்தியர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். துப்பாக்கித் தோட்டாக்கள் அவர்களை நோக்கிப் பாயத் தயாராக இருக்கின்றன.
    இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையிலும், அதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அதுகுறித்து பேசுவதற்கே அவர் அஞ்சுகிறார். அவருக்குதான் 56 அங்குல மார்பு இருக்கிறதே? பின்னர் ஏன் அவர் பேசத் தயங்குகிறார் என்பது தெரியவில்லை என்றார் ராகுல் காந்தி.
    காங்கிரஸ் கேள்வி: இதனிடையே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai