சுடச்சுட

    

    10-ஆம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகிறார் பல்வேறு குறைபாடுகளுள்ள மாற்றுத் திறனாளி

    By DIN  |   Published on : 08th March 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sourabhchougule

    மகாராஷ்டிரத்தில் பல்வேறு குறைபாடுகளுடைய மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி நகரைச் சேர்ந்தவர், சௌரவ் சௌகுலே (21). பிறவியிலேயே பார்வைக் குறைபாடுடைய இவரால் பேச முடியாது; மேலும், காதும் கேட்காது.
    எனினும், கல்வியின் மீது தீராத ஆவல் கொண்ட சௌரவ், தொட்டுணரக் கூடிய சைகை மொழியின் மூலம் படிப்பைத் தொடர்ந்தார். இந்நிலையில், அவர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுத முடிவு செய்தார்.
    இதையடுத்து, நவி மும்பையிலுள்ள ஹெலன் கெல்லர் கல்வி நிலையத்தில் சேர்ந்த சௌரவ் கடந்த 3 ஆண்டுகளாகத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். மகாராஷ்டிரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு வரும் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் சௌரவ் தேர்வு எழுதுவது தொடர்பாக, ஹெலன் கெல்லர் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவயானி ஹட்கர், மகாராஷ்டிர இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியத்தை அணுகினார்.
    சௌரவ் குறித்து அறிந்த கல்வி வாரியம், அவர் தேர்வு எழுத அனுமதியளித்தது. எனினும், பிரெய்லி (பார்வைக் குறைபாடுடையவர்களுக்கான பிரத்யேக மொழி) முறையில் தேர்வு எழுத அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
    இதற்கு மாற்று ஏற்பாடாக, மொழி பெயர்ப்பாளர் ஒருவரையும், தேர்வு எழுத தனிப்பட்ட நபர் ஒருவரையும் கல்வி வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
    இதுகுறித்து தேவயானி ஹட்கர் தெரிவிக்கையில், "மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் தொட்டுணரக் கூடிய சைகை மொழியின் மூலம் சௌரவ் அளிக்கும் பதில்களை மாற்று நபர் எழுத்து வடிவில் அளிப்பார்' என்றார்.
    இதுதொடர்பாக, மகாராஷ்டிர இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியத் தலைவர் கங்காதர் மாமனே தெரிவித்ததாவது:
    பல்வேறு குறைபாடுகளுடைய மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளது மாநிலத்தில் இதுதான் முதல்முறை. தேர்வுக் கூடத்தில் சௌரவ் சௌகுலேவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேவும், தேர்வை முடிக்க அவருக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai