சுடச்சுட

  

  நாட்டிலுள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம், மொத்த கொள்ளளவில் சுமார் 41 சதவீதம் குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, மத்திய நீர் வள அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  நாட்டிலுள்ள முக்கியமான 91 நீர்த்தேக்கங்களில் மொத்த நீர்மட்டம் சுமார் 157.799 பில்லியன் கன மீட்டராகும் (பில்லியன் = 100 கோடி). மார்ச் 2-ஆம் தேதி நிலவரப்படி, இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்மட்டம் சுமார் 64.55 பில்லியன் கன மீட்டராகும். இது மொத்த கொள்ளளவில் சுமார் 41 சதவீதம் குறைவாகும்.
  நாட்டில், ஹிமாசலப் பிரதேசம், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
  எனினும் பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai