சுடச்சுட

  

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச் செயலருமான நாரா லோகேஷின் சொத்து மதிப்பு (ரூ.330 கோடி), கடந்த 5 ஆண்டுகளில் 23 மடங்கு உயர்ந்துள்ளது.
  ஆந்திர சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் லோகேஷ், கடந்த திங்கள்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதில், ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் ரூ.273 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்பட தனக்கு ரூ.330 கோடி மதிப்புள்ள சொத்துகளும், ரூ.6.27 கோடி கடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
  முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது தந்தை சந்திரபாபு நாயுடு உள்பட தனது குடும்பத்தினர் அனைவரது சொத்துகளின் விவரங்களையும் வெளியிட்டிருந்தார் லோகேஷ். அப்போது, தனக்கு ரூ.14.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அவரது சொத்துகளின் மதிப்பு, சுமார் 23 மடங்கு உயர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பங்குகளின் விலை உயர்வு காரணமாக சொத்துகளின் மதிப்பு உயர்ந்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai