Enable Javscript for better performance
இந்த விஷயத்தில் தமிழகத்தைப் பின்பற்றப் போகிறதாம் கேரளா- Dinamani

சுடச்சுட

    

    இந்த விஷயத்தில் தமிழகத்தைப் பின்பற்றப் போகிறதாம் கேரளா

    By DIN  |   Published on : 09th March 2017 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kerala


    கோழிக்கோடு: தமிழகத்தைத் தொடர்ந்து, கேரளாவிலும் பன்னாட்டுக் குளிர்பானங்களுக்குத் தடை விதிக்க கேரள வியாபாரி விவசாய சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நிலத்தடி நீரை உறிஞ்சும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், கேரளாவில் இனி பெப்சி, கோக கோலா நிறுவனங்களின் குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று கேரள வியபாரி விவசாயி எகோபனா சமிதி முடிவு செய்துள்ளது.

    வரும் 14ம் தேதி தங்களது முடிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிவித்து அவரது ஆதரவையும் கோரவிருப்பதாக சங்கத் தலைவர் நஜுருதின் கூறினார்.

    எலுமிச்சைச் சாறு மற்றும் இளநீர் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் 70 சதவீத பன்னாட்டு குளிர்பான விற்பனை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கேரளாவிலும் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பது பெப்ஸி மற்றும் கோக-கோலா நிறுவனங்களுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai