சுடச்சுட

  
  aadhar

  ஏழைப் பெண்கள், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  தூய்மையான சமையல் எரிபொருளை வழங்கும் நோக்கத்தில், நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடக்கி வைத்தார்.
  இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், ஆதார் எண்ணைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அந்த அறிவிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
  இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற விரும்புவோர், தற்போது ஆதார் எண் இல்லையென்றாலும், வரும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் அந்த எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.
  இதுதவிர, ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்த ஒப்புகைச் சீட்டின் நகலை இணைத்தும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். இதுபோன்ற விண்ணப்பங்களில் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றையும் பயனாளிகள் இணைக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  குடும்பம் ஒன்றுக்கு 14.2 கிலோ எடையில் ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகளை மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு எரிவாயு உருளைக்கான மானியமும் முன்கூட்டியே பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதன் பிறகு சந்தை விலையில் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
  இதனிடையே, சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் பெறுவதற்கு பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. தற்போது, ஏழைப் பெண்கள், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறவும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai