சுடச்சுட

    

    உ.பி.யில் பட்டாசுகள் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

    By DIN  |   Published on : 09th March 2017 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலம், எடா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தபோது, எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    கன்சுரி எனும் கிராமத்தில் ரஹீஷ் என்பவர் வசித்து வருகிறார். முறையான அனுமதி மற்றும் உரிமம் எதையும் பெறாமல் சட்டவிரோதமாக அவரது வீட்டில் பட்டாசுகள் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
    இந்நிலையில், ரஹீஷ் வீட்டில் வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. அப்போது வீட்டின் சமையலறையில் எரிந்துகொண்டிருந்த அடுப்பில் இருந்து நெருப்புப் பொறி பறந்துவந்து பட்டாசில் விழுந்தது.
    இதனால், சரசரவென பக்கத்தில் இருந்த பட்டாசுகளிலும் தீ பரவி அனைத்தும் வெடித்துச் சிதறன. அப்போது, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
    காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நேரிட்டபோது ரஹீஷும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai