Enable Javscript for better performance
உ.பி.: சிறையிலிருந்து போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!- Dinamani

சுடச்சுட

    

    உ.பி.: சிறையிலிருந்து போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    By DIN  |   Published on : 09th March 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிறையிலிருந்து போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
    உத்தரப் பிரதேசத்தில் உள்ள 404 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் இறுதிகட்ட வாக்குப்பதிவு புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.
    ஆளும் சமாஜவாதி கட்சி காங்கிரஸýடன் கூட்டணி சேர்ந்து கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. பாஜக, இரண்டு சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டது. பிரதான எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ், யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் களத்தில் இறங்கியிருந்தது.
    இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய உத்தரப் பிரதேசத் தேர்தலில் சிறையிலிருந்து அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    குறிப்பாக, பிரபல தாதாவும், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ-வுமான முக்தார் அன்சாரி, மௌ தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முக்தார் அன்சாரி மட்டுமல்லாமல் அவரது மகன் அப்பாஸ் மற்றும் சகோதரர் சிங்பத்துல்லா அன்சாரி ஆகியோரும் பகுஜன் சமாஜ் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.
    சிறையிலிருந்த படியே, தேர்தலுக்கான அனைத்துப் பணிகளையும் முக்தார் அன்சாரி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
    இதேபோல், நௌதான்வா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அமன் மாணி திரிபாதி என்பவர் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமன் மாணிக்காக அவரது சகோதரிகள் தனுஸ்ரீ மற்றும் அலங்கிரிதா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ராஞ்சி சிறையில் இருக்கும் ஷியாம் நரேன் சிங் என்பவர் சையத்ரஸா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவருக்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
    இவர்கள் ஒருபுறமிருக்க, சிறையிலிருந்தபடியே தங்கள் குடும்பத்தினரை தேர்தலில் போட்டியிட வைத்து அவர்களுக்காக பணியாற்றியவர்களும் இருக்கின்றனர்.
    உதாரணமாக, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் சஞ்சீவ் மகேஸ்வரி என்பவர் தனது மனைவி பாயலை ராஷ்ட்ரீய லோக் தளக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தினார். மேலும், மனைவியின் தேர்தல் பிரசாரத்துக்காக சிறையிலிருந்தபடியே அவர் பணியாற்றியிருக்கிறார்.
    இதேபோல், பாஜக எம்எல்ஏ உதய்பான் கர்வாரியா, காங்கிரஸ் எம்எல்ஏ அகிலேஷ் பிரதாப் சிங் உள்ளிட்டோர் சிறையிலிருந்தபடியே தங்கள் குடும்ப உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தி அவர்களுக்கு தேர்தல் பணியாற்றியிருக்கிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai