சுடச்சுட

  

  உ.பி. பயங்கரவாதி சுட்டுக் கொலை: நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத் சிங்?

  By DIN  |   Published on : 09th March 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RAJNATH2

   

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்கவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.
  மத்தியப் பிரதேசத்தில் பயணிகள் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்தும் அவர் விளக்கமளிக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  மத்தியப் பிரதேச மாநிலம் சாஜிப்பூர் அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி ஒருவரை உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
  அந்த நபருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பயங்கரவாதியை புதன்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
  இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வியாழக்கிழமை விரிவான விளக்கத்தை அளிப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி அமளியில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே, அதுதொடர்பான விளக்கத்தை அளித்து இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai