Enable Javscript for better performance
ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தினால் கட்சிகளின் பிரசாரச் செலவு குறையும்- Dinamani

சுடச்சுட

    

    ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தினால் கட்சிகளின் பிரசாரச் செலவு குறையும்: அருண் ஜேட்லி

    By DIN  |   Published on : 09th March 2017 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ArunJetl

     

    மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால், அரசியல் கட்சிகளின் பிரசாரச் செலவு கணிசமாக குறைவதுடன் நிர்வாகத் தரமும் மேம்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
    "இந்தியாவில் நிதிச் சீர்திருத்தத்துக்கான பிரசாரம்' என்ற தலைப்பில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, அவர் பேசியதாவது:
    நமது நாட்டில் தற்போது சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், மத்திய அரசு, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் நேரமும், சக்தியும் வீணடிக்கப்படுகின்றன.
    நாடாளுமன்றத்துக்கு விவாதத்துக்கு வரும் பிரச்னைகள், தேர்தலுக்காக திசை திருப்பப்பட்டு விடுகின்றன. நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால், அரசின் நிர்வாகமும், செயல்பாடுகளும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
    மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால், பிரசாரமும் பொதுவாக அமைந்துவிடும். பொதுவான பிரசாரம் மேற்கொள்ளும்போது, அதற்கான செலவும் கணிசமாக குறையும். அரசின் நிர்வாகத் தரமும் மேம்படும்.
    எனவேதான், மக்களவை, மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அதற்குரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நமது பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.
    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் அவசியம் என்பதுடன், மிகப்பெரிய அளவில் கருத்தொற்றுமையும் தேவை என்றார் ஜேட்லி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai