சுடச்சுட

  
  semmaram

  file photo

  கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக 65 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கைதான 65 தமிழர்களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான 7 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.

  ஆந்திர வனத்துறை கடப்பா பகுதியில் ரோந்து சென்ற போது, வனப்பகுதிக்குள் 60க்கும் மேற்பட்டோர் மரம் வெட்டுவதைப் பார்த்து வனத்துறை அவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  மேலும், வனப்பகுதிக்குள் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் செம்மரம் வெட்ட பதுங்கியிருப்பதாகவும் ஆந்திர காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து கடப்பா வனப்பகுதிக்குள் ஆந்திர வனத்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

  தேடுதல் வேட்டைத் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai