Enable Javscript for better performance
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக்கொலை- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக்கொலை

    By DIN  |   Published on : 09th March 2017 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    மேலும் சில பயங்கரவாதிகள் அந்த பகுதியில் பதுங்கியுள்ளதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai