சுடச்சுட

    
    shritemple

    குஜராத் மாநிலம், கிர் - சோம்நாத் மாவட்டத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தில் புதன்கிழமை வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி. உடன், பாஜக தலைவர் அமித் ஷா.

    குஜராத் மாநிலம், கிர் - சோம்நாத் மாவட்டத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வழிபாடு செய்தார்.
    சிவபெருமானுடன் தொடர்புடைய 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயமும் அடங்கும்.
    உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
    இந்நிலையில், சோமநாதர் ஆலயத்துக்கு மோடி புதன்கிழமை சென்றார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, குஜராத் முன்னாள் முதல்வரும், சோமநாதர் ஆலய அறக்கட்டளையின் தலைவருமான கேசுபாய் படேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
    ஆலயத்தில் மோடி சுமார் 15 நிமிடம் பூஜையில் ஈடுபட்டார். அப்போது, சிவனுக்கு அவர் நீரால் அபிஷேகம் செய்தார்.
    முன்னதாக, பிரதமர் மோடி குஜராத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ரூ. 30,000 கோடி மதிப்பிலான ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai