சுடச்சுட

  

  நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அளப்பரிய வகையில் பங்காற்றி வரும் பெண்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
  இதுதொடர்பாக, பிரணாப் முகர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவிலும், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெண்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல தலைமுறைகளாக, நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அளப்பரிய வகையில் பெண்கள் பங்காற்றி வருகிறார்கள்.
  இந்த நன்னாளில், அவர்களுக்கு பாலின சமத்துவமும், உண்மையான உரிமைகளும் அளிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தங்களது பொறுப்பாகக் கருத வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
  இதேபோல், பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
  சர்வதேச மகளிர் தினத்தில், பெண்சக்தியின் தளர்வடையாத சுறுசுறுப்பு, உறுதி, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வணங்குகிறேன். பொருளாதார ரீதியில் பெண்கள் அதிகாரம் பெறவும், அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழவும், சமூகத்தில் சமத்துவம் பெறவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது என்று மோடி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai