சுடச்சுட

  

  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச்சண்டை: தீவிரவாதிகள்    இருவர் பலி!

  By DIN  |   Published on : 09th March 2017 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pulwama-encounter

   

  ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் புலவாமா பகுதியில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடக்கும் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பலியானார்கள்.

  ஜம்மு காஷ்மீரின் புலவாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று அதிகாலை முதல் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

  அப்போது வீடு ஒன்றில் இருந்து பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.  சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் தொடங்கினர். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் முழுமையாக சுற்றி வளைத்துள்ளனர்.

  தற்போது இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களில் ஒருவரும் பலியாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்னும் 4 முதல்  5 பேர் அந்த வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுவதால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும், தேடுதல் வேட்டையும் அங்கு நடைபெற்று வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai