சுடச்சுட

    

    தண்ணீர் எடுக்க பெப்சி நிறுவனத்துக்கு கட்டுப்பாடு: கேரளம் முடிவு

    By DIN  |   Published on : 09th March 2017 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pepsi

    கேரளத்தில் குளிர்பான உற்பத்திக்காக பெப்சி நிறுவனம் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
    மாநிலத்தின் வறட்சி நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
    கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் பெப்சி நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. குளிர்பான உற்பத்திக்குத் தேவையான நீரை எடுப்பதற்காக அங்கு 7 ஆழ்துளைக் கிணறுகளை அந்நிறுவனம் அமைத்துள்ளது. அந்தக் கிணறுகளின் வாயிலாக நாளொன்றுக்கு 6.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
    இந்நிலையில், பாலக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, தண்ணீர் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
    இதுகுறித்து அந்த மாநில சட்டப் பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் மாத்யூ தாமஸ் புதன்கிழமை பேசியதாவது:
    பாலக்காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி பாதிப்பு மேலும் தொடராமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பெப்சி நிறுவனம், குளிர்பான உற்பத்திக்கு நிலத்
    தடி நீரை எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
    வழக்கமான அளவைக் காட்டிலும் 75 சதவீதம் குறைவாக தண்ணீர் எடுக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பில் ஏற்கெனவே அந்நிறுவனத்துக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
    அதேநேரத்தில், தமிழகத்தில் பெப்சி நிறுவனத்துக்கு தாமிரவருணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai