Enable Javscript for better performance
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாமல் 100 மாவட்டங்கள்: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

    

    திறந்தவெளி கழிப்பிடம் இல்லாமல் 100 மாவட்டங்கள்: பிரதமர் மோடி

    By DIN  |   Published on : 09th March 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாகிவிட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
    இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை குறிப்பிட்டிருப்பதாவது:
    "தூய்மை இந்தியா' திட்டம், வெகுஜன இயக்கமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாகியுள்ளன.
    அதாவது 3 மாநிலங்களில் உள்ள 101 மாவட்டங்களைச் சேர்ந்த 1,67,226 கிராமங்களில் தற்போது திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை.
    இதற்காக, இதுவரை மொத்தம் 3,48,79,320 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
    திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறையை வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில், "தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai