சுடச்சுட

  

  நவீன இந்தியாவில் பாலின பாகுபாடுகளுக்கு இடமில்லை: பிரணாப் முகர்ஜி

  By DIN  |   Published on : 09th March 2017 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranab

  "நவீன இந்தியாவில் பாலினப் பாகுபாடுகளுக்கு இடம் கிடையாது' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு, "பெண் சக்தி' விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது.
  தமிழகத்தைச் சேர்ந்த 98 வயது யோகாசன கலைஞர் நாணம்மாள் உள்பட 31 பெண்களுக்கு விருதுகளை வழங்கி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில், அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை, ஒருபோதும் மன்னிக்க முடியாது.
  நவீன இந்தியாவில் ஆண்-பெண் பாகுபாடுகளுக்கு இடம் கிடையாது. பெண்களின் முன்னேற்றமே, நவீன இந்தியாவின் முக்கிய நோக்கமாகும் என்றார் பிரணாப்.
  முன்னதாக, இஸ்ரோவின் சந்திரயான், மங்கள்யான் மற்றும் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்கள் ஏவப்பட்டது உள்ளிட்ட சாதனைத் திட்டங்களில் பங்காற்றிய சுபா வாரியர், பி.கோடாநான்யகய், அனட்டா சோன்னே ஆகிய 3 பெண் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
  இதில், சுபா வாரியர், 104 செயற்கைக் கோள் திட்டத்தின் விடியோ பதிவு நடைமுறைக்கான பொறுப்பாளராக செயல்பட்டவர் ஆவார். இதேபோல, கேரளத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்து முழுக்க முழுக்க பெண்களால் நடத்தி வரப்படும் கதகளி நடனக் குழுவினரும் விருது பெற்றனர். இக்குழு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கதகளி நடன நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai