சுடச்சுட

    

    நாள்குறிப்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எடியூரப்பா வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th March 2017 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு பணம் வழங்கியது தொடர்பான நாள்குறிப்பு ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கி, விசாரணைக்கு உத்தரவிட துணிவு உள்ளதா? என முதல்வர் சித்தராமையாவுக்கு எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
    முன்னாள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜெயபிரகாஷ் ஹெக்டே, பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது: கர்நாடக சட்ட மேலவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கோவிந்தராஜு வீட்டில் சிக்கிய நாள்குறிப்பில் காங்கிரஸ் மேலிடத்துக்கு நிதி அளித்த தகவல்கள் உள்ளன. இதனை நான் முதல்முறையாக தெரிவித்தபோது, காங்கிரஸ் கட்சியினர் என்னைச் சாடினர்.
    நேர்மை, பாராபட்சமற்ற நிர்வாகம் எனக் கூறி வரும் முதல்வர் சித்தராமையா, தைரியமிருந்தால், நாள்குறிப்பு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
    இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
    காங்கிரஸிலிருந்து விலகி பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவில் இணையும் காங்கிரஸ் தலைவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எந்த உறுதிமொழியையும் இதுவரை அளிக்கவில்லை என்றார் அவர். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், துணைத் தலைவர் ஆர்.அசோக், முன்னாள் அமைச்சர் சோமண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai