பிகார்: 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை
By DIN | Published on : 09th March 2017 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பிகார் மாநிலம், கயை மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலின்போது 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக, மத்திய ரிஸர்வ் காவல் படையைச் சேர்ந்த அதிகாரியொருவர் புதன்கிழமை கூறியதாவது:
கயை மாவட்டத்திலுள்ள பஸ்காத்வா கிராமத்தில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், மத்திய ரிஸர்வ் காவல் படையின் கோப்ரா படைப்பிரிவினரும், பிகார் போலீஸாரும் புதன்கிழமை அங்கு சென்றனர்.
தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், அப்பகுதியிலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, அந்தப் பகுதியில் மேலும் சோதனைகளை மேற்கொள்வதற்காக கூடுதல் படையினர் அங்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்றார் அந்த அதிகாரி.