சுடச்சுட

    

    பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு: பிகார் பெண் எம்எல்ஏக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th March 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்7றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பிகார் மாநில பெண் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பிகார் சட்டப் பேரவை புதன்கிழமை கூடியது. அப்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ரஞ்சு கீதா, அதே கட்சியைச் சேர்ந்த பூனம் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் பிரேமா செளதரி, இஜியா யாதவ், பாஜகவின் பாகீரதி தேவி என கட்சி வேறுபாடின்றி அனைத்து பெண் எம்எல்ஏக்களும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று இந்தக்
    கோரிக்கையை வலியுறுத்தினர்.
    நாட்டின் மக்கள்தொகையில் பாதிபேர் பெண் சமூகத்தினர் என்பதால், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
    அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சட்டப் பேரவைத் தலைவர் விஜய்குமார் செளதரி, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai