Enable Javscript for better performance
பொதுத் தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு மன அழுத்தம்: ஆய்வில் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு மன அழுத்தம்: ஆய்வில் தகவல்

    By DIN  |   Published on : 09th March 2017 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நினைத்து தேர்வெழுத உள்ள மாணவ-மாணவிகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
    இதுதொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த தனியார் இணையதளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
    பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எண்ணி 13 சதவீத மாணவர்கள் மிக அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வை நினைத்து அஞ்சும் மாணவர்கள் உடல் ரீதியிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலான மாணவர்கள் சரியாக உணவை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தேர்வினால் மன அழுத்தம் ஏற்பட்டால், இதயத் துடிப்பில் கூட மாற்றம் ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது. தேர்வு காலத்தில் பல மாணவர்கள் தங்களைக் கூட சரியாக பராமரித்துக் கொள்ளமாட்டார்கள். மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்புதான்.
    தேர்வு காலங்களில் ஒரு பட்டியலிட்டுக் கொண்டு அதை பின்பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும். திட்டமிட்டபடி படித்தால் அனைதது பாடங்களையும் அவர்களால் படித்துவிட முடியும். தேர்வு நடைபெறும் காலத்தில் மாணவர்கள் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai