சுடச்சுட

    

    போபால் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். அமைப்பின் ஒத்திகை: ம.பி. அரசு தகவல்

    By DIN  |   Published on : 09th March 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயிலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய ஒத்திகை என மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
    மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலிலிருந்து உஜ்ஜயின் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. ஷாஜாபூர் மாவட்டம், ஜப்டி ரயில் நிலையம் அருகில் வந்தபோது, அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதில், 10 பேர் காயமடைந்தனர். அவர்களில், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
    இதுதொடர்பாக, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் சட்டப் பேரவையில் புதன்கிழமை கூறியதாவது:
    குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பானது, முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதிச் செயலாகும். குண்டுவெடிப்பு நிகழ்ந்த 5 மணி நேரத்துக்குள் இதில் தொடர்புடையர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் சிவராஜ் சிங் சௌஹான்.
    இந்த விவகாரம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய ஒத்திகையாகும். இதேபோன்ற குண்டுவெடிப்புகளை பிற இடங்களில் நடத்துவதற்கும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai