சுடச்சுட

  

  மகளிருக்கு அதிகாரத்தை அளிக்காமல் மனிதகுலம் முன்னேறிவிட முடியாது: பிரதமர் நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 09th March 2017 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_pray

  ""மகளிருக்கு உரிய அதிகாரத்தை அளிக்காமல் மனிதகுலம் முன்னேற்றத்தைக் கண்டுவிட முடியாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமருக்கான பிரத்யேக வலைதளத்தில் புதன்கிழமை அவர் விடுத்த செய்தியில் கூறியுள்ளதாவது:
  இனி, பெண்கள் முன்னேற்றம் என்பது விவாதப் பொருளாக இருக்கக் கூடாது. பெண்களின் மூலம் முன்னேற்றம் என அது மாற வேண்டும்.
  பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதில், பெண்களை யாராலும் வெல்ல முடியாது. இதுதான் அவர்களுடைய பலம். இதுகுறித்து, அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
  பெண்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  மகப்பேறு சலுகைகளை அனைத்துத் தாய்மார்களுக்கும் அளிக்கும்பொருட்டு, புதிய குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
  "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம்' என்ற திட்டத்தின் மூலம் பெண் சிசுக் கொலை வேகமாக குறைந்து வருகிறது. இது அரசின் திட்டமாக மாத்திரம் இல்லாமல், தற்போது மக்கள் இயக்கமாக மாறி வருகிறது.
  பெண்களின் பாதுகாப்புக்காக நவீன ரக செல்லிடப்பேசிகளில் அவசர ஒலியெழுப்பும் பொத்தான், தங்கியிருக்கும் இடத்தை செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கும் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
  பெண்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணியிடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai