Enable Javscript for better performance
"மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'

    By DIN  |   Published on : 09th March 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவை, சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
    பெங்களூரில் மாநகராட்சி சார்பில் மகளிர் தின விழா, புதன்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் சித்தராமையா பேசுகையில், ""உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைப் போலவே, மக்களவை, சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வரை பெண்கள் போராட வேண்டும்; இதற்காக பெண்கள் இயக்கம் நடத்துவது அவசியம்'' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai