சுடச்சுட

    

    மறு ஆய்வு மனு: விசாரணையை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 09th March 2017 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறுஆய்வு மனுக்கள் மீது விரைந்து தீர்ப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    கேரளத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கு எதிராக அந்த மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஏறத்தாழ 4 ஆண்டுகளாகியும், அதன் மீது கேரள உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
    இதையடுத்து, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் மனு தாக்கல் செய்தார். அது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மோகன் எம் சந்தானகெüடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்வது என்பது, அவருக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச வாய்ப்பைப் பெறுவதற்கான உரிமை. எனவே, அவற்றை பரிசீலிப்பதில் காலதாமதம் செய்யக் கூடாது. மனுக்களை விசாரிக்க குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என்றபோதிலும், மறுஆய்வு மனுவுக்கு 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏற்புடையதல்ல.
    இத்தகைய மனுக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்காமல் விரைந்து அவற்றை முடித்து வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மேற்கொள்ளும் வழக்கு விசாரணைப் பட்டியலில் மறுஆய்வு மனுக்களை காலந்தாழ்த்தாமல் நீதிமன்றப் பதிவாளர்கள் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai