சுடச்சுட

    

    மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் ஹமீது அன்சாரி.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஹமீது அன்சாரி அறிவித்தார்.

    இந்த அமர்வில் சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த வழி வகுக்கும் 3 சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு உள்ளது. ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாவது அமர்வில் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai