சுடச்சுட

  

  மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் பத்மநாபன் (49) திடீர் உடல்நலக் குறைவால் புது தில்லியில் புதன்கிழமை (மார்ச் 8) காலமானார்.
  காலமான அரவிந்த் பத்மநாபனுக்கு தாயார் சாந்தா பத்மநாபன், பொன்னா என்கிற மனைவியும், தாரா என்னும் மகளும் உள்ளனர்.
  திருநெல்வேலியில் பிறந்த அரவிந்த் பத்மநாபன், ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். வர்த்தகச் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அங்கு பணியைத் தொடங்கிய அவர், பின்னர் வர்த்தகச் செய்திப் பிரிவின் ஆசிரியர், செய்தியாளர் குழுத் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றை ஏற்றார். பின்னர் நிர்வாக ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். நாட்டின் சிறந்த வர்த்தகச் செய்தி ஆசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டார் அரவிந்த் பத்மநாபன்.
  முன்னதாக, பிடிஐ செய்தி நிறுவனம், டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிவி18 ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். செய்திகளைச் சேகரிப்பது, வர்த்தக நுணுக்கங்களைச் சுவைபட எழுதுவது, செய்திகளைத் தொகுப்பது ஆகியவற்றுக்காகப் பரவலான பாராட்டைப் பெற்றவர்.
  அரவிந்த் பத்மநாபனின் தந்தை, காலஞ்சென்ற ஜி.பத்மநாபன், நாளிதழ்கள் மேம்பாட்டுக்கான ஆய்வு அமைப்பான "பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா', " இந்தியன் ஈஸ்டர்ன் நியூஸ்பேப்பர் சொசைட்டி' ஆகியவற்றில் பணியாற்றி புது தில்லி செய்தியாளர்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  மறைந்த அரவிந்த் பத்மநாபனின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மார்ச் 8) மாலை புது தில்லியில் நடைபெற்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai