சுடச்சுட

    

    மேற்கு வங்க மாநிலம், மால்டா பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இந்தச் சம்பவத்தில் மேலும் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதுகுறித்து அந்த மாநில போலீஸார் கூறியதாவது:
    மால்டா பகுதிக்குட்பட்ட பஹார்பூர் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது, அந்தச் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஜாய் பாண்டே என்பவரும், அவரது நண்பர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
    இதில், ஜாய் பாண்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai