Enable Javscript for better performance
வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள்: நிதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள்: நிதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 09th March 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய - வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலி அமைக்கும் பணிகளுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில சமூக அமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
    அதன்படி, மத்திய அரசின் நிலவர அறிக்கையானது நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
    அப்போது இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்திய - வங்கதேச எல்லைப் பகுதிகளில் வேலி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இதற்கு தேவையான நிதியை உடனடியாக விடுவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai