சுடச்சுட

    

    வேட்பாளர் மரணம்: உ.பி.யின் ஒரு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு

    By DIN  |   Published on : 09th March 2017 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேட்பாளர் இறந்ததை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் ஆலப்பூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி , வாராணசி, காஜிப்பூர், ஜான்பூர், பதோஹி, துத்தி, ராபர்ட்ஸ்கஞ்ச், தக்கியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 40 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏழாவது கட்டமாக புதன்கிழமை நடைபெற்றது. ஆலப்பூர் தொகுதியிலும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது.
    இந்நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியில் இருந்த சமாஜவாதி வேட்பாளர் சந்திரசேகர் கனெளஜியா மாரடைப்பால் அண்மையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த சந்திரசேகரின் மனைவி சங்கீதா செளதரியை புதிய வேட்பாளராக சமாஜவாதி கட்சி அறிவித்தது. இந்நிலையில், அந்தத் தொகுதியில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆலப்பூர் தொகுதியில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததற்குப் பின்னரே உத்தரப் பிரதேசத்தில் வாக்குக் கணிப்பு நிலவரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai