அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்: மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு போராட்டம்
By DIN | Published on : 10th March 2017 10:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஹைதராபாத்: அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றும் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா(32) கடந்த 23-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் நேற்று இரவு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர்.