சுடச்சுட

  

  அஸீமானந்தா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு: ஒவைஸி வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 10th March 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து சுவாமி அஸீமானந்தா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மஜ்லீஸ் கட்சித் தலைவர் அஸாதுதின்
  ஒவைஸி வலியுறுத்தியுள்ளார்.
  அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேரை குற்றவாளிகள் என்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. அதேசமயத்தில், சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 6 பேருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவர்களை இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.
  இந்நிலையில், சுவாமி அஸீமானந்தா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஒவைஸி வலியுறுத்தியுள்லார். இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
  அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கிலிருந்து அஸீமானந்தா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து என்ஐஏ அமைப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போதுதான், அஸீமானந்தா தண்டிக்கப்படுவார். இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சிலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றார் ஒவைஸி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai