சுடச்சுட

    

    ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 10th March 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் சாலை விபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
    இதுகுறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
    நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை இத்தனை அதிகமாக இருப்பதற்கு, மோசமான சாலைக் கட்டமைப்புக்கும் பங்கு உள்ளது.
    சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விபத்துகளைத் தடுக்க, நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் மேம்பாலங்களையும், சுரங்கச் சாலைகளையும் மத்திய அரசு அமைக்கும். பாதுகாப்பான பயணத்துக்காக, நாட்டின் 14,268 கி.மீ. நீளச் சாலைகள், ரூ.1.83 லட்சம் கோடி செலவில் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
    வரும் 2019-ஆம் ஆண்டு மே மாதம் இந்தப் பணிகள் நிறைவுறும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai