சுடச்சுட

  

  உத்தரப் பிரதேசத்தில் இந்திய-நேபாள எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தில் தூண் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசித் தாக்கியதில் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு ஆயுதப்படை (எஸ்எஸ்பி) வீரர்கள் 9 பேர் காயமடைந்தனர்.
  இதுதொடர்பாக, எஸ்எஸ்பி தளபதி தில்பக் சிங், வியாழக்கிழமை கூறியதாவது:
  உத்தரப் பிரேதசத்தில் சம்பூர்நகர் பகுதியில், இந்திய-நேபாள சர்வதேச எல்லையில் 200-ஆவது எண் தூண் இல்லாமல் இருந்தது. அந்த இடத்தில் தூண் கட்டுவதற்காக, இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில், நிலம் அளப்பதற்கு கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது.
  இதனிடையே, 200-ஆவது தூண் இருந்த இடத்தில் நிரந்தரக் கட்டுமானம் ஒன்றை அமைப்பதற்கான பணிகளை நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை தொடங்கினர். அதையறிந்த எஸ்எஸ்பி படையினர், சம்பவ இடத்துக்குச் சென்று கட்டுமானப் பணிகளைத் தொடங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
  அதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், கற்களை வீசித் தாக்கத் தொடங்கியதால், எஸ்எஸ்பி படையினர் கண்ணீர்ப்புகை வீசி, அவர்களை விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில், எஸ்எஸ்பி வீரர்கள் 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று எஸ்எஸ்பி படையின் தளபதி தில்பக் சிங் கூறினார்.
  இதுதொடர்பாக, நேபாளத் தலைநகர் காத்மாண்டி உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ""எல்லையில் நிகழ்ந்த மோதலில் எஸ்எஸ்பி வீரர்கள் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை; எல்லையில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் முன், இரு தரப்பு நில அளவை அதிகாரிகள் கூடி விவாதிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai