சுடச்சுட

    

    உண்மையான சொத்து விவரத்தை அளித்தீர்களா? மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    By DIN  |   Published on : 10th March 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SC

    "கடன் ஏய்ப்பு தொடர்பான வழக்கில், உண்மையான சொத்து விவரத்தை அளித்தீர்களா?' என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
    பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 வங்கிகளிடமிருந்து விஜய் மல்லையா சுமார் ரூ.9,000 கோடி கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் கூட்டமைப்பின் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், விஜய் மல்லையா தனது 3 பிள்ளைகளுக்கு சட்ட விரோதமாக 4 கோடி டாலரை (சுமார் ரூ.267 கோடி) அனுப்பியதாக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
    இதுகுறித்து நீதிபதிகள் ஏ.கே. கோயல் மற்றும் யு.யு. கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
    அப்போது, விஜய் மல்லையா சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து அவர் பெற்ற ரூ.267 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்று மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்தகி கூறினார்.
    இதையடுத்து, "நீதிமன்றத்தில் விஜய் மல்லையா உண்மையான சொத்து விவரங்களை அளித்தாரா, இல்லையா என்பது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். மேலும் தனது பிள்ளைகளுக்கு ரூ.267 கோடி அனுப்பியது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதா, இல்லையா என்பதையும் அவர் விளக்க வேண்டும்' என்று விஜய் மல்லையா தரப்பு வழக்குரைஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியா அழைத்து வந்து விசாரிக்க முயன்று வருவதாக அரசு தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்தகி நீதிமன்றத்திடம் தெரிவித்தார். இறுதியில், மனு தொடர்பான தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai