சுடச்சுட

    

    "உப்ஹார்' திரையரங்கு தீ விபத்து விவகாரம்: கோபால் அன்சலின் மேல்முறையீடு நிராகரிப்பு

    By DIN  |   Published on : 10th March 2017 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி கிரீன் பார்க்கில் உள்ள "உப்ஹார்' திரையரங்கு தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் திரையரங்க உரிமையாளர் கோபால் பன்சலுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத் நீதிபதிகள் ரஞ்சன் கோகோயி, குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கோபால் அன்சலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' எனத் தெரிவித்தனர்.
    இதைத் தொடர்ந்து, கோபால் அன்சல் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, "உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, நான்கு வாரங்களுக்குள் சரணடைய விதிக்கப்பட்ட காலக்கெடு வியாழக்கிழமையுடன் (மார்ச் 9) நிறைவடைகிறது. எனவே, அவர் சரணடைய சிறிது கால அவகாசம் வேண்டும்' எனகேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதிகள், "விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்பதற்காக கோபால் அன்சல் மார்ச் 20-ஆம் தேதி சரணடைய வேண்டும்' என தெரிவித்தனர்.
    மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), உப்ஹார் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோயி, குரியன் ஜோசப், ஏ.கே. கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
    அப்போது மூன்று நீதிபதிகளில் ஒருவரும், இந்த வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியவர்களின் ஒருவருமான ஏ.கே. கோயல், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார். எஞ்சியுள்ள இரு நீதிபதிகளான ரஞ்சன் கோகோயி, குரியன் ஜோசப் ஆகியோர் எடுத்த பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    அப்போது, உப்ஹார் திரையரங்கின் உரிமையாளர்களில் ஒருவரான சுஷில் அன்சல் ஏற்கெனவே 5 மாதங்கள் 20 நாள்கள் சிறையில் இருந்துவிட்டதையும், அவரது வயோதிகம், நோய் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதுமானது எனக் கருதிய நீதிபதிகள், மற்றொரு உரிமையாளரான கோபால் அன்சலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தனர். மேலும், அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த 4 மாதங்கள் 30 நாள்களை கழித்து எஞ்சியுள்ள நாள்களில் சிறையில் இருக்க வேண்டும். அவர் நான்கு வாரங்களுக்குள் சரணடைய கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai