சுடச்சுட

    

    உறைவிடப் பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் சாவு: போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 10th March 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தும்கூரு அருகே உண்டு உறைவிடப் பள்ளியில் புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 5 மாணவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
    கர்நாடக மாநிலம், தும்கூரு அருகே உள்ள ஹுளியூரில் வித்யாவர்த்தி உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
    இந்தப் பள்ளியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்த ஆகாஷ் பல்லவி (16), 8-ஆம் வகுப்பு படித்துவந்த ஸ்ரீயாஸ் (14), 10-ஆம் வகுப்பு படித்து வந்த சாந்தமூர்த்தி (16), 8-ஆம் வகுப்பு மாணவர் சுதர்ஷன் (14) மற்றும் பள்ளிக் காவலர் ரமேஷ் (50) ஆகியோர் புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்டுள்ளனர்.
    இந்நிலையில், சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவருக்கும் வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை பள்ளி நிர்வாகிகள் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ஆகாஷ் பல்லவி, ஸ்ரீயாஸ், சாந்தமூர்த்தி ஆகிய 3 மாணவர்களும் உயிரிழந்தனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
    விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: இதனிடையே, இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கல்வித்துறை, காவல் துறைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்
    ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai