சுடச்சுட

  

  ஒரு ரூபாய் மிட்டாயில் ரூ.300 கோடி வருமானம்: பல்ஸ் நிறுவனம் சாதனை

  By DIN  |   Published on : 10th March 2017 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pulse

  புதுதில்லி: வெறும் ரூ.1 விலையில் மிட்டாய்களை விற்று ரூ.300 கோடி வருமான பார்த்து பல்ஸ் நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது.
  சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக, நுகர்பொருள் சந்தையில், இந்தியா தனது பெரும் பங்களிப்பை வழங்கிவருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்திய பல்பொருள் வர்த்தக சந்தையை கைப்பற்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டிபோட்டுச் செயல்படுகின்றன.
  இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.1 விலையியுள்ள பல்ஸ் மிட்டாய்களை விற்று இந்திய அளவில் ரூ.300 கோடி வர்த்தகம் செய்துள்ளது. டி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த இந்த பல்ஸ் மிட்டாய்கள், மாங்காய் சுவை கொண்டதாகும். இதற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
  பெட்டிக்கடைகள் முதல் பல வர்த்தக இடங்களிலும் ரூ.1 சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டால், உடனே பல்ஸே அல்லது அதன் விலையொத்த மிட்டாய்களை வியாபாரிகள் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. இதுவும் பல்ஸ் மிட்டாய் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது.
  இந்திய நுகர்பொருட்கள் சந்தையில் உள்ள ஓரியோ, மார்ஸ் பார் போன்ற நிறுவனங்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முயன்றும் ரூ.300 கோடி ஆண்டு வர்த்தகத்தை எட்டமுடியவில்லை.
  இந்நிலையில், வெறும் மிட்டாய் விற்று டி.எஸ் குழுமம் இந்த சாதனையை படைத்துள்ளதை கார்ப்பரேட் நிறுவனங்கள் வியப்புடன் பார்க்கின்றன.
  ஏற்கனவே, பதஞ்சலி போன்ற இந்திய நிறுவனங்களின் வருகையால், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பி அண்ட் ஜி போன்ற சர்வதேச நிறுவனங்களின் வர்த்தகம் பாதித்துள்ளது.
  தற்போது பல்ஸ் மிட்டாய் விற்பனையின் விஸ்வரூப வெற்றி காரணமாக, வர்த்தப் போக்கை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai