சுடச்சுட

  

  கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் அதை தாமாக முன்வந்து அறிவிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
  இதுகுறித்து பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வருமான வரித் துறை குறிப்பிட்டுள்ளதாவது:
  கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளவர்கள், அதனை தாமாக முன்வந்து அறிவிக்கும் "பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின்' கீழ் அதுகுறித்து தகவலை உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், வைத்துள்ள பணத்தில் 77.25 சதவீதம் வரி, கூடுதல் வரி ஆகியவற்றுடன் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும். ஒருவரது விரல் ரேகையை வைத்தே அவரைக் கண்டுபிடித்துவிடும் வசதிகள் உள்ளதைப் போல, ஒருவர் கருப்புப் பணம் வைத்திருந்தால் நாங்கள் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவோம்.
  ஏனெனில், கருப்புப் பணப் பதுக்கல் குறித்த அத்தனை விவரங்களும் எங்களிடம் உள்ளன என்று அந்த விளம்பரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai