சுடச்சுட

    

    காளஹஸ்தி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.02 கோடி வசூலானதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு 15 நாள்களுக்கு ஒருமுறை கோயில் சந்நிதிகள், பரிவார தேவதை சந்நிதிகளில் உள்ள உண்டியல் நிரம்பியவுடன் அதை அதிகாரிகள் கணக்கிடுவது வழக்கம்.
    அதன்படி, புதன்கிழமை காலை கோயில் செயல் அதிகாரி பிரம்மராம்பா தலைமையில் உண்டியல்களை திறந்து கோயில் ஊழியர்கள் கணக்கிட்டனர். அதில், ரூ. 1.02 கோடி பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது.
    மேலும், 81 கிராம் தங்கம், 337.100 கிலோ வெள்ளி, 131 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றதையொட்டி உண்டியல் வருவாய் அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai