சுடச்சுட

    

    காஷ்மீர் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச ஐ.நா. முடிவு

    By DIN  |   Published on : 10th March 2017 11:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் முடிவு செய்துள்ளார்.
    இதுதொடர்பாக, அவருடைய செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியூயார்கில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் விவாதிப்பாரா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
    இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அன்டோனியோ குட்டேரஸ் முடிவு செய்துள்ளார்.
    இதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கத் தேவையான நடவடிக்கைகளை அவர் நிச்சயம் மேற்கொள்வார் என்றார் ஃபர்ஹான் ஹக்.
    காஷ்மீர் பிரச்னை தொடர்பாக ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன், தமது பதவிக்காலத்தின்போது பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக, இரு நாடுகளும் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவுக்கு வர வேண்டும் என்றும், இதற்கு ஐ.நா. சபை முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai